Header Ads

இணையத்தில் பாதுகாப்பாக தேட!.


கூகுல் உள்ளிட்ட பல தேடியந்திரங்கள் உங்கள் கம்ப்யூட்டரில் குக்கீஸ் எனப்படும் சாப்ட்வேர் உளவாளிகளை ஒளிய வைத்து தகவல்களை சேகரித்து கொண்டே இருப்படு உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.தெரியும் தான் ஆனால் என்ன செய்வது என்று நீங்கள் ஆற்றாமையோடோ அல்லது இது தான் இணைய நிதர்சனம் என்றோ நினைத்து கொண்டிருந்தால்,பாதுகாப்பான தேடலில் ஈடுபட உங்களுக்கு உதவ இணையதளங்கள் இருக்கின்றன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.


குகூன் இந்த வகையான இணையதளம் தான்.

குகூன் என்ன செய்கிறது என்றால் நீங்கள் தேடும் போது தேடியந்திரங்களோ இணையதளங்களோ குக்கீஸ் மூலம் உங்கள் இணைய செயல்பாடுகளை கண்காணிக்க முடியாமல் செய்கிறது.இதன் மூலம் உங்களை பற்றிய தகவல்கள் சேகரிக்கப்படுவதையும் தடுக்கிற‌து.

அடு மட்டும் அல்ல,இணையம் மூலம் வைரஸ் மற்றும் மால்வேர் போன்றவை உள்ளே வராமலும் இது தடுக்கிற‌து.

மேலும் ஒரு மாற்று இமெயிலையும் உருவாக்கி தந்து குப்பை மெயிகளிலும் இருந்து காப்பாற்றுகிற‌து.


உங்கள் இணைய அந்தரங்கத்தை கட்டி காக்க உதவும் சேவையான இதனை பிரவுசர் நீட்டிப்பாக டவுண்லோடு செய்து கொள்ளலாம்.

இணையதள முகவரி;https://getcocoon.com/

No comments

Powered by Blogger.