Header Ads

பிடிஎப் கோப்புகளை சுருக்க ஒரு இணையதளம்.



app_screenshot
Image
கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்பது போன்ற நிலை இணையத்தில்  சில நேரங்களில் ஏற்படலாம். அதாவது கோப்புகளை சுருக்கவும் வேன்டியிருக்கும்.  அதே நேரத்தில் அவற்றின் தரமும் பாதிக்க கூடாது என தோன்றும். பொதுவாக புகைப்படங்களில் இந்த தடுமாற்றம் வரலாம். பிடிஎப் கோப்புகளுக்கும் இது பொருந்தும்.
இமெயில் வாயிலாக அல்லது வேறு இணைய வாகனத்தில் பிடிஎப் கோப்புகளை பகிரும் போது அவற்றின் அளவை சுருக்க விரும்பலாம். இது கோப்பு விரைவாக பயணிக்க உதவும். ஆனால் கோப்பின் தன்மையும் உள்ளடக்கமும் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டுமே என்ர கவலையும் இருக்கும்.
பிடிஎப் கம்பிரசர் இந்த இரண்டையும் சாத்தியமாக்குகிறது. விண்டோஸ் இயங்கு தளத்தில் செயல்படக்கூடிய சேவை இது. டவுண்லோடு செய்வதன் மூலம் இதை பயன்படுத்தலாம்.
டவுண்லோடுக்கு பிறகு பயன்படுத்த எந்த வழிகாட்டுதலும் தேவையில்லை. நேரடியாக பயன்படுத்தலாம். அந்த அளவுக்கு எளிதானது. பிடிஎப் கோப்புகளை சுருக்கி அதன் அளவை குறைத்து கொள்ளலாம். பூட்டு போடப்பட்ட அதாவது என்கிரிப்ட் செய்த கோப்புகளையும் சுருக்கலாம். பிடிஎப் கூட்டத்தையும் அதாவது ஆயிரக்கணக்கான கோப்புகளை ஒரே நேரத்தில் சுருக்க முடியும்.
ஆனால் இப்பை சுருக்குவதால் கோப்பின் தரம் பாதிக்காது என இந்த சேவை உறுதி அளிக்கிற‌து.
கோப்புகள் சுருக்கப்பட ஆகும் நேரம் ,சுருக்கத்தின் அளவு போன்ற விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். கோப்புக்ளை இழுத்து வருவது அவற்றை ஓரிடத்தில் அடுக்கி வைப்பது போன்ற வசதிகளும் இருக்கிறது.
இணையதள முகவரி;http://www.pdfcompressor.org/

No comments

Powered by Blogger.